மகரம் வைகாசி மாத ராசி பலன் 2023!

மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும்.

மகர ராசியினைப் பொறுத்தவரை சூர்ய பகவான் 5 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். பூர்விக புண்ணிய ஸ்தானங்கள் வலுப்பெற்று இருக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை தள்ளிப் போன திருமணங்கள் கைகூடும்; அதிலும் எதிர்பார்த்த வரன் கைகூடும்.

ஆளுமைத் திறன் மிக்க நபராக நபராக நீங்கள் மாறுவீர்கள். உடல் நலனைப் பொறுத்தவரை மிகவும் தொய்வுடன் காணப்படுவீர்கள். எதிர்பாலினத்தவர்மீது ஈர்ப்பு ஏற்பட்டு அது காதல் வரை செல்ல வாய்ப்புண்டு.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை அரசு சார்ந்த வேலைகள் கிடைக்கப் பெறும். நம்பிக்கையால் மிகப் பெரும் ஏற்றத்தினைச் சந்திப்பீர்கள்.

செவ்வாய் பகவானும் சுக்கிர பகவானும் இணைந்துள்ளதால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தொழில்ரீதியாக புதுத் தொழில் ஆரம்பிப்போருக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும், பழைய கடன்களை அடைப்பீர்கள். மேலும் புதிதாக பல முதலீடுகளையும் செய்வீர்கள்.

வண்டி, வாகனங்கள் சார்ந்த விரயச் செலவுகள் ஏற்படும், மருத்துவரீதியாகவும் விரயச் செலவுகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

விநாயகப் பெருமானை வழிபட்டு வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews