மகரம் தை மாத ராசி பலன் 2023!

புதன் பகவான் உங்கள் ராசிக்குள் வருகிறார், சனி பகவான் 2 ஆம் இடத்திற்குச் செல்வதால் வேலைவாய்ப்புரீதியாக இருந்த தடைகள் சரியாகும். வருமானம் பெரிதளவில் இருக்காது. ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருத்தல் நல்லது. வீண் விரயச் செலவுகள் மருத்துவரீதியாக ஏற்படும்.

பூமி தொடர்பான விஷயங்கள் செலவினங்களை ஏற்படுத்தும், வண்டி, வாகனங்கள் சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். 40 சதவீதம் நேர்மறையான விஷயங்கள் நடக்கப் பெறும். 8 ஆம் இடத்தில் சனி பகவானின் பார்வை இருப்பதால் தந்தை உடல் நலனில் அக்கறை தேவை.

தொழில்ரீதியாக போட்டிகள் அதிகரிக்கும். எதிரிகள் அதிகமாவார்கள்; எதிரிகளுடன் நட்புப் பாராட்டுங்கள். உடன் பிறப்புகள்ரீதியாக செலவுகள் ஏற்படும். பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் பெரிதாகும்.

குழந்தைகள்ரீதியாக செலவினங்கள் ஏற்படும், கடன் வாங்கும் சூழலுக்கு ஆளாவீர்கள். கடன் வாங்கும்போதும், கொடுக்கும்போதும் கவனத்துடன் செயல்படுதல் வேண்டும்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களால் வீண் விரயச் செலவுகள் ஏற்படும். எதிர்காலத்துக்கு முதலீடு செய்து விரயச் செலவுகளை முடிந்தளவு தவிர்க்கவும். குடும்பத்தில் இல்லத்தரசிகளுக்கு வேலைப் பளு அதிகமாக இருக்கும், குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே மனக் கசப்பு ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.