மகரம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

மகர ராசியினைப் பொறுத்தவரை அலைச்சல்கள், மன அழுத்தங்கள் போன்றவற்றினை கடந்த காலங்களில் கொண்டு இருப்பீர்கள்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புது வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வெளிநாடு முயற்சிகள் கைகூடும். தொழில்சார்ந்த எந்தவொரு நகர்வும் இல்லாமல் இருந்தநிலையில் தற்போது ஓரளவு பண வரவு கையில் இருக்கும். தொழில் அபிவிருத்தி செய்யும் முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருத்தல் நல்லது.

விரயச் செலவுகள் ஏற்படும் காலகட்டமாக இருப்பதால் விரயத்தினை சுப விரயமாக முடிந்தளவு மாற்றிவிடுங்கள். புது வீடு கட்டுதல், வீட்டினைப் புதுப்பித்தல், வண்டி, வாகனங்கள் வாங்குதல், தங்கநகைகள் வாங்குதல், குடும்பச் சுற்றுலா செல்லுதல் என சுப விரயச் செலவுகளைச் செய்யுங்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை அலைச்சல்கள் நிறைந்ததாக இருக்கும்; மனம் தளராமல் வரன் தேடுதல் வேண்டும்; காரணம் இல்லாமல் வரனைத் தட்டிக் கழிக்காமல் இருத்தல் வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நலன் சார்ந்த தொந்தரவுகளும், விரயச் செலவுகளும் ஏற்படும். மருத்துவரீதியான வீண் செலவுகள் ஏற்படும். தாயின் உடல் நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்டம் சார்ந்த பண வரவுகளை நம்பி எந்தவொரு முதலீட்டையும் செய்யாதீர்கள். குடும்பத்தில் நாவடக்கம் மிகவும் அவசியம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews