மகரம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

மகரம் சுபகிருது வருட பலன்கள்

தொழில் மீது அர்ப்பணிப்புக் கொண்ட மகரம் ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் சிறப்பான வருடமாக இருக்கும். உடல் நிலையினைப் பொறுத்தவரையில் பெரிய பாதிப்புகள் இல்லையெனினும் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும்.

தொழில் ரீதியாக பல சரிவுகளைச் சந்தித்தாலும் குருவின் பார்வை உங்கள் மீது படுவதால் அதனைச் சமாளிக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். பொருளாதார நெருக்கடியினை சிறப்பாகக் கையாள்வீர்கள்.

மனரீதியாக சோம்பேறித்துடன் இருப்பீர்கள். தேவையில்லாத வீண் பேச்சுகள் பல பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். பேச்சில் கவனம் தேவை. சகோதர- சகோதரிகள் ஸ்தானம் பலவீனமானதாக உள்ளது, அவர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.

தாய், தந்தை உடல் நலனில் அக்கறை தேவை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை இருப்போர் அதனை இந்த ஆண்டு செய்து முடிப்பர். மருத்துவச் செலவு விரய செலவாக ஏற்படும்.

வண்டி, வாகனம் ரீதியான செலவுகள் அதிகம் ஏற்படும். புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்குவதை குறைந்தது ஐந்து மாதத்திற்கு தள்ளிப் போடுங்கள். புதிதாக வேலை எதையும் தேட வேண்டாம், இருக்கும் வேலையிலேயே இந்த ஒரு வருடம் இருத்தல் நல்லது.

கிரகங்களின் வலிமை சரியில்லாததால் பணி ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும்போது உயர் அதிகாரிகளிடம் பொறுமையினைக் கையாள்தல் வேண்டும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்போருக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கடன் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினைகளை சந்திப்பீர்கள், நண்பர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. காத்திருக்க முடிந்தால் திருமணத்தினை ஓராண்டுக்குத் தள்ளிப் போடுதல் நன்மை பயக்கும். உறவினர்கள் எதிரியாக மாறுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.