மகரம் செப்டம்பர் மாத ராசி பலன் 2018!

அன்புள்ள மகரம் ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு எதிர்பாராத வகையில் மாற்றங்கள் நிகழக்கூடிய மாதமாக இருக்கும். சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் குருவுடன் சஞ்சரிக்கும் பொழுது  முனேற்றத்திற்கான பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். இளமை, அழகு கூடும். தள்ளிப்போன திருமண பேச்சுவார்த்தை நல்ல படியாக முடிவடையும். மேலும் வீட்டை விரிவாக்கம் செய்வது, விலையுர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

செப்டம்பர் 6-ம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் விலகி சென்ற உடன்பிறப்புகள் மீண்டும் இணைவார்கள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4,11-ம் இடங்களின் அதிபதியான செவ்வாய் உச்சமாக இருப்பதால் திடீர் மாற்றங்களும், திருப்பங்களும் உண்டாகும். அதிகமாக அக்கறை செலுத்தாத விஷயங்களில் இருந்து ஆதாயம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 6,9-ம் இடங்களின் அதிபதியான புதன் சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகம் உருவாகுவதால் தாராளமான பணவரவு வரக்கூடும். ஆறாம் வீட்டின் அதிபதி எட்டாம் இடத்தில் மறைவதால் திடீர் திருப்பங்கள் நடைபெறக்கூடும். சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படக்கூடும்.

செப்டம்பர் 15-ம் தேதி புதன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் தந்தை வழியால் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாட்களாக உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு , இந்த மாதம் சம்பள உயர்வுக்கான அறிகுறி தென்படும். சிலருக்கு சம்பள உயர்வு கூடிய பதவி உயர்வு கிடைக்கும்.

சனி வக்ர நிவர்த்தியாகி இருப்பதால் எந்த காரியம் தொடங்கும் பொழுதும் ஒரு முறைக்கு பல முறை யோசித்த பிறகே செயலில் ஈடுபடுங்கள். சனி 12-ம் வீட்டில் அமர்ந்து ஏழரைச் சனியாக தொடர்வதால் பயணங்கள் அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கக்கூடும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment