மகரம் புரட்டாசி மாத ராசி பலன் 2022!

சனி பகவான் வக்கிர கதியில் இருந்து நேர்கதிக்கு மாறி ஆட்சி பீடத்தில் உள்ளார், 3 ஆம் இடத்தில் குரு பகவான், சுக்கிரன் 9 ஆம் இடத்தில் குருவின் பார்வையில் உள்ளார்.

10 ஆம் இடத்தில் கேது பகவான் சனி பகவானின் பார்வையில் உள்ளார், சிறு முயற்சியும் பெரு வெற்றியினைக் கொடுக்கும். இதுநாள் வரை தள்ளிப் போன திருமணங்கள் இனி கைகூடும், நண்பர்கள் வட்டாரம் பெரிதாகும்.

தொழில் கூட்டாளிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள், உறவினர்கள் மத்தியில் அன்பு அதிகரிக்கும், கணவன்- மனைவி இருவரும் மிகவும் பாசத்துடன் இருப்பர். கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. தாய்க்கு உடல் நலக் குறைவு ஏற்படும்.

வண்டி, வாகனங்களால் செலவுகள் ஏற்படும், புதிதாக வண்டி, வாகனங்களை வாங்கும் முயற்சியினை இப்போதைக்குத் தள்ளி வைக்கவும். பூர்விக நிலத்தில் வீடு கட்டுதல், வீட்டை புதுப்பித்தல் என ஏதாவது சுப செலவு செய்வீர்கள்.

தந்தை- மகன் உறவில் மனக் கருத்து ஏற்படும், வேலைப் பளு அதிகமாக இருக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைத்தாலும் வேலை பிடிக்காமல் போகும்.

உடன் பிறப்புகளின் உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டம நாட்களில் பொறுமையுடன் நிதானத்துடனும் செயல்படுதல் நல்லது. சிவபெருமானை வழிபட்டு வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.