மகரம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

ஏழரை சனி, வக்கிர சனி என சனி பெயர்ச்சி இவ்வளவு நாளாக ஆட்டிப் படைத்து வந்தது. 9 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன், புதன், 3 ஆம் இடத்தில் குரு, 5 ஆம் இடத்தில் செவ்வாய் என கோள்களின் இட அமைவு உள்ளது.

கோள்களின் இட அமைவு சாதகமான நிலையினை அக்டோபர் மாதத்தில் கொடுக்கின்றது.

வேலைவாய்ப்பு ரீதியாக திட்டமிட்டபடி வேலையினை முடிப்பீர்கள், பணிச் சுமை குறையும், புதிய வேலைவாய்ப்பு, இடமாற்றம், பதவி உயர்வு என நீங்கள் நினைத்த காரியங்கள் ஈடேறும்.

தொழில்ரீதியாகவும் நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்துக்குள் அடி வைப்பீர்கள். திருமணம் சார்ந்து வரன் தேடுவோர் முழு நம்பிக்கையுடன் தேடுவீர்கள்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை இதுவரை இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருக்கும் கசப்பான அனுபவங்கள் குறையும்.

மாணவர்கள் இதுவரை கடந்த மோசமான காலகட்டத்தினைக் கடப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரித்து முழு முயற்சியுடன் படிக்கத் தொடங்குவீர்கள்.

உடல் ஆரோக்கியம் ரீதியாக இதுவரை சந்தித்த பிரச்சினையில் இருந்து மீள்வீர்கள். பல மாதங்களுக்குப் பின்னர் அனுகூலம் நிறைந்த மாதமாக இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.