மகரம் நவம்பர் மாத ராசி பலன் 2022!

ஜென்ம சனியில் இருந்து மகர இராசிக்கு விடுதலை கிடைக்கும் காலமாகும். 1 ஆம் இடத்தில் சனி பகவான், 3 ஆம் இடத்தில் குரு பகவான், செவ்வாய் 5 ஆம் இடத்தில் வக்கிரம், சுக்கிரன், சூர்யன், புதன் 11 ஆம் இடத்தில் என கோள்களின் இட அமைவு உள்ளது.

ராகு, கேதுவால் இடையூறுகள் பெரிதளவில் இல்லை. நவம்பர் மாதத்தின் இரண்டாம் பாகம் மகர ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்த மோசமான சூழ்நிலைகளில் இருந்து மீளும் காலமாக இருக்கும்.

எடுக்கும் முயற்சிகள் கைகொடுக்கும், மனம் திருப்திகரமாக இருக்கும். வருத்தங்கள் குறையும். இந்த ஓராண்டில் இருந்த மன பாரங்கள் குறையும், கடன் சுமையால் தத்தளித்தவர்கள் கடனைக் கட்டி முடிப்பீர்கள்.

பூர்விகச் சொத்துகளில் இருந்த இழுபறிகள் சரியாகும். வேலைவாய்ப்புரீதியாக நீங்கள் சந்தித்த பிரச்சினைகளை தைரியத்துடன் கையாள்வீர்கள். விரயச் செலவுகள் ஏற்பட்டாலும் ஓரளவு பண வரவையும் எதிர்பார்க்கலாம். வண்டி, வாகனங்கள்ரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும்.

தாய்வழிச் சொந்தங்களால் உதவிகள் கிடைக்கப் பெறும். தந்தை – மகன் உறவில் பிரச்சினைகள் எழ வாய்ப்புகள் அதிகம். உடன் பிறப்புகள் விரயச் செலவுக்கு ஆளாக்குவார்கள். நீண்டநாள் பிரிந்திரிந்த உறவினர்கள் ஒன்று கூடுவார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.