மகரம் மே மாத ராசி பலன் 2023!

மகர ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு- ராகு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 4ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 2 ஆம் இடத்தில் உள்ளார். சுக்கிரன் 6ஆம் இடத்தில் உள்ளார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை சுமாரான மாதமாக மே மாதம் இருக்கும். புது மாற்றங்கள், புது முயற்சிகள் குறித்துத் திட்டமிடலாம். ஆனால் இப்போதைக்கு எதையும் செயல்படுத்தும் முயற்சியில் களமிறங்க வேண்டாம்.

வேலை செய்யும் இடங்களில் தொந்தரவுகள் ஏற்படும், வேலைப்பளு அதிகரிக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன்கள் அமையாது; வரன் குறித்த பேச்சுவார்த்தைகளில் குழப்பங்கள் நீடிக்கும், உறுதியான முடிவினை எடுக்கமுடியாமல் குழம்பிப் போய் இருப்பீர்கள்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் கசப்பான வார்த்தைகளைப் பேசாமல் இருந்தால் ஓரளவு சுமுகமான நிலை நீடிக்கும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

திடீரென கோபம் ஏற்படுதல், உணர்ச்சி வசப்படுதல் என்பது போன்ற விஷயங்கள் மன அழுத்தத்தினைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களை முடிந்தளவு அனுசரித்துச் செல்லுங்கள்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மாணவர்களைப் பொறுத்தவரை அடுத்த கட்டத்தினை நோக்கி எடுக்கும் முயற்சிகள் வெற்றியினைக் கொடுக்கும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை அனைத்தையும் சரி செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.