மகரம் மார்கழி மாத ராசி பலன் 2022!

குடும்பத்தில் விரயச் செலவுகள் அதிக அளவில் ஏற்படும். வண்டி, வாகனங்களால் செலவுகள் ஏற்படும், மன உளைச்சலும் ஏற்படும். 5 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால், வீடு, மனை வாங்குதல் என்பது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

6 ஆம் இடத்தினை புதன் பகவான் பார்க்கிறார், நீங்கள் எடுக்கும் புது முயற்சிகள் வெற்றியினைக் கொடுக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் கைகூடும். வேலைவாய்ப்புரீதியாக புது வேலைவாய்ப்பு, இடமாற்றம், பதவி உயர்வு என நீங்கள் நினைத்த விஷயங்கள் அனைத்தும் ஈடேறும்.

புதிதாகத் தொழில் துவங்க நினைப்போருக்கும், தொழிலை அபிவிருத்தி செய்ய நினைப்போருக்கும் ஏற்ற காலகட்டம் இதுதான். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தையால் அனுகூலங்கள் ஏற்படும்.

தொட்டது எல்லாம் துலங்கும் மாதமாக மார்கழி மாதம் இருக்கும். தாய் சொந்தங்கள் வழியாக செலவினங்கள் ஏற்படும். தாய்- தந்தையின் உடல் நலன் சிறப்பாக இருக்கும். சந்திராஷ்டம நாட்களில் கவனத்துடன் செயல்படுதல் நல்லது.

கொடுத்த பழைய கடன்கள் வந்து சேரும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். முருகப் பெருமானை வணங்கி வருதல் நல்லது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.