மகரம் மார்ச் மாத ராசி பலன் 2023!

மகர ராசியினைப் பொறுத்தவரை வேலைவாய்ப்புரீதியாக புதிய மாற்றங்களை நோக்கிய மன நிலையில் இருப்பீர்கள். தைரியத்துடனும், துணிச்சலுடனும் எந்தவொரு முடிவினையும் எடுப்பீர்கள்.

வேலைவாய்ப்பு கிடைக்காமல் இதுவரை இருந்து வந்தவர்கள் கடுமையாக முயற்சிகளை தன்னம்பிக்கையுடன் செய்வீர்கள். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், மேல் அதிகாரிகளின் பாராட்டு, சக பணியாளர்களின் அங்கீகாரம் என அனைத்தும் கிடைக்கப் பெறும்.

தொழில்ரீதியாக மேற்கொள்ளும் வெளியூர்ப் பயணங்கள் ஆதாயப் பலன்களைக் கொடுக்கும். ஏழரைச் சனி காலத்தில் குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்த கணவன்- மனைவி ஒன்று சேர்வர்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை அனைத்து விஷயங்களிலும் சில தாமதங்கள் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகளால் குடும்பத்தில் சொத்து சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

பொருளாதாரம் ரீதியாக கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்; முடிந்தளவு வீண் செலவுகளைத் தவிர்க்கவும். மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் படிப்பில் கவனம் செலுத்தவும்.

4-ஆம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் உடல் ஆரோக்கியம்ரீதியாக சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.