Astrology
மகரம் ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018!
அன்புள்ள மகரம் ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் செலவுகள் அதிகரிக்கின்ற மாதமாக இருக்கப் போகின்றது. மாத தொடக்கத்தில் ரிஷபத்தில் இருக்கும் புதனால் வேலை வாய்ப்பு வரக்கூடும். ஒரு சிலருக்கு உதிரி வருமானம் வரக்கூடும். ஜூன் 5-ம் தேதிக்கு பிறகு புதன் மிதுனத்தில் சஞ்சரிப்பதால் பூர்விக சொத்து சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். ஒரு சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் வரக்கூடும். தந்தை வழி சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டாகலாம்.
ஜூன் 9-ம் தேதி சுக்கிரன் கடகத்தில் சஞ்சரிக்கும்போது சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும். கோயில் திருப்பணிகளுக்கு உதவி செய்வீர்கள். ஆடை, ஆபரணம், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஜென்ம ராசியில் கேதுவும் செவ்வாயும் இருப்பதால் எந்த காரியம் செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுங்கள். பத்தாம் இடத்தில் இருக்கும் குரு பதவி மாற்றத்தை கொடுக்கும்.
உங்கள் தனாதிபதியான சனி பகவான் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் வக்ர இயக்கத்தில் சஞ்சரிப்பதால் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படும் மாதமாக இருக்கப் போகின்றது. திடீர் உடல் நலப் பாதிப்புகள் உண்டாகும். ஏழரைச் சனி தொடர்வதால் எதிலும் குழப்பமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது தொல்லைகள் ஏற்படக்கூடும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது.
கணவன் மனைவி வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்கள் பகையாவார்கள். தாய் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். குரு பத்தாம் இடத்தில் வக்ர இயக்கத்தில் இருப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் தவிப்பீர்கள். பணவரவு சீராக இருந்தாலும், வருமானத்தை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும்.
