மகரம் ஜூன் மாத ராசி பலன் 2023!

மகர ராசியினைப் பொறுத்தவரை 2 ஆம் இடத்தில் சனி பகவான், 7 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் இட அமர்வு செய்துள்ளனர். ஏழரைச் சனி காலமாக இருந்தாலும் வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை சவுகரியமான மாற்றங்களைக் காண்பீர்கள்.

மேலும் இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் நீங்கள் நினைத்ததுபோல் நடந்தேறும். தொழில் ரீதியாக வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மேலும் பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்வீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எடுக்கும் முயற்சிகள் பெரிதளவில் சாதகமானதாக இருக்காது. வரன் தள்ளிப் போனால் மனம் தளராதீர்கள்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும், வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்; பழைய பிரச்சினைகளை மீண்டும் பேசாதீர்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை ஆழ்ந்து யோசித்து எந்தவொரு முடிவினையும் எடுங்கள். மேலும் முன் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசியுங்கள்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

கடந்த காலங்களில் நீங்கள்பட்ட துன்பங்கள், துயரங்கள் படிப்படியாகக் குறையும். தன்னம்பிக்கையோடு எந்தவொரு விஷயத்தையும் எதிர்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews