Connect with us

மகரம் ஜூலை மாதம் ராசி பலன்கள் 2018!

Astrology

மகரம் ஜூலை மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள மகரம் ராசிக்காரர்களே, இந்த ஜூலை மாதம் தொட்டதெல்லாம் துலங்கும் மாதமாக இருக்கப் போகின்றது. கடக புதன் இதுவரை பிரிந்த சொந்த பந்தங்களை ஒன்று சேர்த்து வைப்பார். எதிர்காலம் கருதி எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

புதன் உங்கள் ராசியை பார்ப்பதால் திறமை பளிச்சிடும். பூர்வீக சொத்து சம்மந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். வேலை சம்மந்தமாக மாற்றங்கள் நிகழும். சக பணியாளர்களிடம் மனக்கசப்புகளும் உருவாகலாம். பொறுப்புகள் அடிக்கடி மாற்றப்படும். பேச்சில் கவனம், செயலில் நிதானமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும்.

ஜூலை 5-ம் தேதி சிம்மத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழிலில் மாற்றங்கள் உருவாகலாம். சுக்கிரன் அஷ்டமத்தில் மறையும்போது புதிய தொழில் தொடங்கும் முயற்சி நல்ல விதமாக முடிவடையும். நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையக்கூடும். பிள்ளைகளுக்கான சுபகாரியங்கள் கைகூடும். குளிர் சாதன பொருட்கள் மற்றும் நூதன கருவிகளை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

ஜூலை 9-ம் தேதி மகரத்தில் செவ்வாய் வக்ரம் அடைவதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். உங்கள் ராசியில் ஜென்ம கேதுவும், வக்ர செவ்வாய்யும் இணைந்து இருப்பதால் ஏற்ற இறக்க நிலை இருந்து கொண்டே இருக்கும். பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் இறுதியில் எவ்வழியிலாவது பணம் கைக்கு வரக்கூடும். கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும்.

ஜூலை 4-ம் தேதி குரு வக்ர நிவர்த்தியாகும்போது சகோதர பகை விலகி மீண்டும் இணைவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனம் வாங்க, விற்க எடுக்கின்ற முயற்சிகள் நல்ல விதமாக முடிவடையும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Astrology

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 24/05/2022

    By

    *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வருமானத்தை...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    News

    இன்றைய ராசிபலன் – 23/05/2022

    By

    *_🔯 மேஷம் -ராசி: 🐐_* குணநலன்களில் மாற்றம் உண்டாகும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம்...

  • Sunday pirantha naal Sunday pirantha naal

    Astrology

    ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

    By

    ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் பலன்கள் ஞாயிற்றுக்கிழமை சூரியன் கிரகம் அதிகமாக இருக்கிறது. சூரியன் அதிபதியாக கொண்ட ராசி சிம்ம ராசியாகும். இந்த கிழமையில்...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன்- 22/05/2022

    By

    *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 21/05/2022

    By

    *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உறவினர்களை பற்றிய புரிதலும், ஒற்றுமையும் அதிகரிக்கும்....

To Top