மகரம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

12 ஆம் இடத்தில் புதன் பகவான் இருக்க, சுக்கிரன் இராசியிலேயே உள்ளார். சனி பகவான் 2 ஆம் இடத்தில் உள்ளார். வேலைவாய்ப்புரீதியாக வேலைப்பளு, மன நிம்மதியின்மை, மன அழுத்தம் என நீங்கள் கடந்த காலங்களில் சந்தித்த பிரச்சினைகளில் இருந்து மீள்வீர்கள்.

சுக்கிரன்- சனி பகவானின் கூட்டணி இடப் பெயர்ச்சி வேலைவாய்ப்புரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் 5 ஆம் இடத்திலும், ராகு பகவான் 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை 3 ஆம் இடத்தில் இருப்பதால் குரு பகவான் இருப்பதால் தடங்கல்கள் ஜனவரி மாதத்தில் நீடிக்கவே செய்யும்; வரன்கள் தட்டிப் போகும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பெரிய அளவில் நேர்மறையான மாற்றங்கள் இல்லாவிட்டாலும், முந்தைய பிரச்சினைகள் பாதியளவாகக் குறைந்து இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக கடந்த காலங்களில் சந்தித்த தோல்விகளில் இருந்து மீள்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படுவீர்கள். நேர்மறையான எண்ணங்கள் மிகுந்து காணப்படுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்ரீதியாக ஜென்ம சனி விலகிவிட்டது. இதனால் இதுவரை இருந்துவந்த மனம் சார்ந்த நிம்மதியின்மை, மன அழுத்தம் காணாமல் போகும்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பச் சுமை, மனக் கலக்கம், மனப் போராட்டம் என கடந்த காலங்களில் இருந்த சுமைகள் அனைத்தும் பாதியாகக் குறையும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews