மகரம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் மகர ராசிக்கு 5 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். வேலை, தொழில் மற்றும் வியாபாரம் போன்ற விஷயங்களில் கடந்த காலங்களில் சந்தித்த அவமானங்களுக்குப் பதில் சொல்லும் வகையிலான மாற்றங்கள் ஏற்படும்.

கஷ்ட காலங்களில் உங்களைக் கேலி செய்தவர்களின் மூக்கின்மேல் விரல் வைக்கும் வகையில் புகழ், பதவி, செல்வாக்கு உங்களைத் தேடிவரும். பணத்தட்டுப்பாடு சரியாகும், குடும்பத்தில் செலவுகள் ஏற்பட்டாலும் சுப விரயச் செலவுகளாகவே இருக்கும். மேலும் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

வீடு வாங்குதல், வண்டி வாகனங்கள் வாங்குதல், நிலம் வாங்குதல், தங்க நகைகள் வாங்குதல் என சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உடன் பிறப்புகளுடனான வாக்குவாதங்களைத் தவிர்க்கவும், இளைய சகோதர/சகோதரிகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்படும்.

தாய்வழி உறவினர்கள் பல ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு வருகை புரிவார்கள். பிள்ளைகள் கல்விரீதியாக மிகவும் மேம்பட்டுக் காணப்படுவார்கள். உயர் கல்விக்காக நீங்கள் தெளிவாகத் திட்டம் தீட்டலாம்.

வேலைவாய்ப்புரீதியாக பலருக்கும் வெளிநாடு வேலையானது கிடைக்கப் பெறும். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வந்தால் வாழ்க்கையில் நன்மைகளும் அனுகூலங்களும் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.