மகரம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

மகர ராசியினரான நீங்கள் ஜென்ம சனி முடிவை நோக்கி எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருப்பீர்கள். தலைக்குமேல் உள்ள பிரச்சினைகள் குறையும் மாதமாக இருக்கும். 12 ஆம் இடத்தில் சூர்யன்-சுக்கிரன்-புதன் என கோள்கள் இணைந்து காணப்படும்.

சுற்றுலா, பொழுதுபோக்கு என செலவுகள் அதிகம் ஏற்படும். 3 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார். கேது 10 ஆம் இடத்தில், ராகு 4 ஆம் இடத்தில், செவ்வாய் பகவான் 5 ஆம் இடத்திலும் என கோள்களின் இட அமைவு உள்ளது.

வேலைவாய்ப்புரீதியாக எடுக்கும் புது முயற்சிகள் பெரிதளவில் வெற்றிகள் கொடுக்காது; ஆனால் 2023 ஆம் ஆண்டு வெற்றியினை நோக்கிப் பயணிப்பீர்கள்.

எதிர்காலத் திட்டங்கள் குறித்து கவலை எதுவும் கொள்ளாதீர்கள். தேவையில்லாமல் சிந்திப்பதைத் தவிர்க்கவும். தொழில்ரீதியாகவும் அடுத்த ஆண்டு லாபம் தரும் வகையிலான மாற்றத்தினை நீங்கள் பார்ப்பீர்கள். அதனால் தற்போதைக்கு புதிதாக முடிவுகள் எதுவும் எடுக்காமல் இருத்தல் நல்லது.

திருமண காரியங்களை தற்போதைக்குத் தள்ளி வைத்தால் எதிர்பார்த்த வரன் விரைவில் கைகூடும். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை இந்தமாதம் மிகச் சிறப்பாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை நிம்மதி இல்லாமல் காணப்படுவீர்கள், ஆனால் அடுத்து வரும் காலம் உங்களுக்குச் சிறப்பானதாக இருக்கும். மாணவர்கள் குழப்பம் நிறைந்து காணப்படுவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews