மகரம் சித்திரை மாத ராசி பலன் 2023!

மகர ராசியினைப் பொறுத்தவரை நன்மைகள் ஏற்படும் மாதமாக இருக்கும். மூத்த சகோதரர்களுடன் பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையால் தாய்-தந்தை மற்றும் உடன் பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

தாயின் ஆரோக்கியத்தில் இதுவரை இருந்துவந்த சிறு சிறு பிரச்சினைகள் பெரும் தொந்தரவுகளாகி பின்னர் மருத்துவச் சிகிச்சையால் சரியாகும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் வெற்றியினைத் தரும்; ஆனால் மனை வாங்கும்போது சட்டச் சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து பார்த்து வாங்கவும்.

பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் சரியாகும்; கோர்ட் சார்ந்த வழக்குகளின் தீர்ப்புகள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும். தொழில் செய்வோருக்கு உகந்த காலகட்டமாக இருக்கும். உத்யோகம் சார்ந்த விஷயங்களில் பல புதிய மாற்றங்கள் நடக்கும். வேலையிழந்து தவிப்போருக்கு வேலை கிடைக்கும்.

புது வேலைக்கு முயற்சிப்போருக்கு தடங்கல்கள் ஏற்பட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கப் பெறும். வியாபாரரீதியாக கடன்கள் கிடைக்கப் பெறும்; வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும்.

வாக்கு ஸ்தானம் பலவீனமாக இருப்பதால் பேசும்போது கவனத்துடனும் நிதானத்துடனும் பேச வேண்டும்; இல்லையேல் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

எதிரிகளுடனும் அன்பு பாராட்டுங்கள்; புறம் பேசுவதையும், பொய் பேசுவதையும் அறவே தவிர்க்கவும். விநாயகர் வழிபாடு செய்து வந்தால் நன்மை நடக்கும். கணபதி ஹோமம் செய்தால் சங்கடங்கள் சரியாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews