மகரம் அதிசார கும்ப சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

உண்மைக்காக போராடும் மகர ராசி அன்பர்களே! கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாள் ஒரு வருடத்தை விட நீளமாக இருக்கக்கூடிய மனநிலையை ஒவ்வொரு நாளும் அனுபவித்து கொண்டு இருந்து இருப்பீர்கள். இந்த நிலை இந்த வருடத்தில் குறைய இருக்கிறது.

ஏழரை சனி காலத்தில் எவர் ஒருவர் அசைவம் சாப்பிடும் பழக்கத்துடன் இருக்கிறாரோ, மது அருந்தும் பழக்கத்துடன் இருக்கிறாரோ அவருக்கு தீராத பிரச்சனைகள், தேவையில்லாத சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும். அதனால் தான் சனியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை கைவிடுங்கள். மது அருந்துவதை கைவிடுங்கள் என்று வலியுறுத்துகிறோம். ஜீவகாருண்யம் என்ற சைவ உணவு பழக்கம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு சனி பகவானால் பெரிய அளவு கஷ்டங்கள் இருக்காது.

சனி பகவானின் குரு காலபைரவர் ஆவார். காலபைரவர் தான் சனி பகவானுக்கு நவக்கிரக பதவியை தந்தவர். பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஆயுள் மற்றும் தொழிலை தீர்மானிக்கும் கிரகமாக சனி பகவான் இருக்கிறார்.

சனி பகவானின் குருவாக இருக்கும் காலபைரவரை தினமும் ஜெபம் செய்து வருவதன் மூலமாக சனி பகவான் பெரு மகிழ்ச்சியடைகிறார். அவ்வாறு மகிழ்ச்சி அடைவதன் மூலமாக ஜென்மச் சனி, வாக்குச் சனி காலத்தில் கூட சனி பகவான் பெருமளவு துன்பங்கள் தருவது கிடையாது.

பின்வரும் மகர ராசி நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்குரிய நட்சத்திர பைரவ மந்திரத்தை தினமும் 108 முறை எழுதி வர வேண்டும் அல்லது ஒரு மணி நேரம் ஜெபித்து வர வேண்டும்.

உங்கள் ஊரில் உள்ள பழமையான சிவாலயத்தில், பைரவர் சன்னதிக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஜெபம் செய்து வருவது மிகவும் நன்று.

உத்திராடம் நட்சத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  ‘ஓம் ஹ்ரீம் பம் ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ண பைரவாய நமஹ’

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ‘ஓம் ஹ்ரீம் பம் கபால பைரவாய நமக’

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ‘ஓம் ஹ்ரீம் பம் சண்டை பைரவாய நமஹ’

என்ற மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை ஜெபிக்க வேண்டும் அல்லது 108 முறை எழுதி வர வேண்டும் அல்லது பைரவரின் வாகனமாக இருக்கும் தெரு நாய்களுக்கு தினமும் சைவ உணவு தானம் செய்ய வேண்டும் அல்லது ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் பைரவருக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும். பைரவருக்கு அத்தார், புனுகு, ஜவ்வாது, சந்தனாதி தைலம், செவ்வரளி மாலை, நாட்டு பசும் பால், அரகஜா போன்றவைகளை வாங்கி தர வேண்டும். அப்போது இந்த ஜென்ம நட்சத்திர பைரவ மந்திரத்தை பைரவரை பார்த்தவாறு ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும்.

கர்ம காரகன் சனி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நம்முடைய கர்ம வினைகளை எப்படி அனுபவிக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்பவர் சனி பகவான் ஆவார். போன நான்கு பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களில் பாவ வினைகளின் தொகுப்பை இந்த பிறவியில் ஜென்ம சனி காலத்தில் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கர்ம விதி ஆகும்.

இருந்தபோதிலும் திருந்த வேண்டும் மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் சனி பகவானின் குருவாகிய காலபைரவ மந்திரத்தை தினமும் ஜெபம் செய்து வருவதன் மூலமாக கர்ம வினைகள் படிப்படியாக குறைந்து கொண்டே வரும். அதன் மூலமாக நிம்மதியான, பண பற்றாக்குறை இல்லாத, ஆரோக்கிய குறைபாடு இல்லாத வாழ்க்கை படிப்படியாக கிடைக்கும்.

ராகு மகா திசையும் ஜென்ம சனியும் சேர்ந்து வரும் 30 வயதிற்கு குறைவான மகர ராசி அன்பர்கள் காம ரீதியான அவமானங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருந்திருப்பீர்கள். இந்த வேதனையான காலம் வெகுவிரைவில் காலபைரவர் ஜெபத்தின் மூலமாக சரியாகிவிடும்.

சந்திர மகா திசையும் ஜென்ம சனியும் சேர்ந்து வரும் 15 வயதுக்கு உட்பட்ட மகர ராசி அன்பர்கள் மற்றும் அவரது பெற்ற தாய் பல்வேறு விதமான துயரங்களுக்கு ஆளாகி இருப்பார்கள். இந்த கஷ்டமான சூழ்நிலை பைரவ ஜெபத்தின் மூலமாக சரியாகிவிடும்.

சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews