மகரம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

மகர ராசியினைப் பொறுத்தவரை சுக்கிரன் 5ஆம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்; மேலும் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் வீற்றுள்ளார். சுக்கிரன் உச்சம் அடைந்துள்ளார். புதன் பகவான் உங்களுக்கு ஆதாயப் பலனைக் கொடுப்பார்.

இதுவரை இருந்த மந்தநிலையில் இருந்து ஓரளவு மீளும் காலகட்டமாக இருக்கும், பொருளாதாரத்தினைக் கணக்கில் கொண்டால் பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியாக வங்கிக் கடன்கள் கிடைக்கப் பெறும், கடந்த காலங்களில் நீங்கள் நடக்குமா? என்று எண்ணி ஏங்கிக் காத்திருந்த விஷயங்கள் தற்போது நடக்கப் பெறும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் மன வெறுமை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நலத் தொந்தரவுகள் ஏற்படும், பிள்ளைகளின் விஷயத்தில் கூடுதல் அக்கறையும், கவனமும் தேவை.

குடும்பத்தின் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும்; மாணவர்களைப் பொறுத்தவரை தெளிவான சிந்தனையுடன் இருப்பர்; கவனச் சிதறல்கள் குறைந்து மிக ஆர்வத்துடன் படிப்பர்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு குறைந்து காணப்படும்; அனுசரணை இல்லாமல் இருக்கும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்தல் நல்லது; முடிந்தளவு வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

மேலும் யாருக்கும் அறிவுரை கூறுதைத் தவிர்த்தல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews