மகரம் ஆவணி மாத ராசி பலன் 2022!

ஆவணி மாதத்தில் சனி ஜென்மத்திலும், சூரியன் எட்டாம் இடத்திலும் உள்ளது. அதனால் எந்தவொரு விஷயத்திலும் கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது. விநாயகர் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு, அனுமன் வழிபாடு செய்தல் நன்மை பயக்கும்.

அதிலும் குறிப்பாக அனுமன் வழிபாட்டிற்காக வடை மாலை சாத்துதல், வெற்றிலை மாலை சாத்துதல் செய்தல் என ஏதாவது ஒரு முக்கிய வழிபாடு செய்தல் அனுகூலத்தை ஏற்படுத்தும்.

வீடு, மனை சார்ந்த இடப் பிரச்சினைகளில் இருந்த மோசமான சூழ்நிலை படிப்படியாக மாறுவதைக் கண்கூடப் பார்ப்பீர்கள். தொழில் அபிவிருத்தி, தொழிலில் லாபம், உத்தியோக ரீதியான பணி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்தும் மிகச் சிறந்த காலகட்டமாக இருக்கும்.

அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் இருக்கும்பட்சத்தில் மிகச் சிறந்த ஆதாயத்திற்கு இட்டுச் செல்வதாக அமையும். அடி வயிறு, நரம்புக் கோளாறு, உடல் கோளாறு, மன அழுத்தக் கோளாறு என உடல் ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

மேலும் உடல் சார்ந்த பிரச்சினைகள் விரயச் செலவுகளுக்கு இட்டுச் செல்லும். கோபம் உங்களை சட்ட சிக்கல்கள் உட்பட பல பெரும் பிரச்சினைகளுக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும்.

நண்பர்கள் உடனான உறவில் கோபத்தால் விரிசல் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.