மகரம் ஆடி மாத ராசி பலன் 2022!

சனி பகவான் ராசியிலேயே இருப்பதால் நிச்சயம் மிகச் சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டுகளில் இருந்த வருமானத்தைவிட செலவு, தொழில்ரீதியான நஷ்டம், குடும்பத்தில் தொடர் பிரச்சினைகள் என உங்களை வாட்டி வதைத்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

சூரியன் – புதன் இணைவு 7 ஆம் வீட்டில் வேலை மாற்றத்தினை ஏற்படுத்தும். வேலைரீதியாக அலைச்சல் இருந்தாலும் மிகச் சிறந்த ஆதாயம் கிடைக்கும். தொழில் ரீதியாக சில வாய்ப்புகள் தட்டிப் போனாலும் நஷ்டம் இல்லாமல் தொழில் நகரும்.

பதவி உயர்வு, புதிய வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிக்கல்கள் இருந்தாலும் நீங்கள் நினைத்ததே இறுதியில் கைகூடும். நீங்கள் நன்மைக்காக ஒரு விஷயம் செய்தாலும் பழிச் சொல்லுக்கு உறவினர்களால் ஆளாக்கப்படுவீர்கள்.

வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கான உகந்த காலகட்டம் இதுதான். மேலும் வெளிநாடுகளில் வசிப்போர் வீடு வாங்குதல், எதிர்பார்த்த வேலைவாய்ப்பு போன்றவை கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

காதல் திருமணங்கள் பெற்றோர் சம்மதத்துடன் கைகூடும். கணவன்- மனைவி இடையேயான உறவில் உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படும். திருமணமானது தாய் வழி சார்ந்த உறவுகளில் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்டநாள் கடனை கட்டி முடிப்பீர்கள்.

நவகிரக வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்தல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews