Connect with us

கொரோனா எதிரொலி: ஆட்டோவை வடை கடையாக மாற்றிய இளைஞர்

News

கொரோனா எதிரொலி: ஆட்டோவை வடை கடையாக மாற்றிய இளைஞர்

கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக தனது ஆட்டோவின் மூலம் வருமானம் கிடைக்காததால் ஆட்டோவை வடை கடையாக மாற்றிய இளைஞர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்

இந்த நிலையில் திடீரென அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஆட்டோ ஓட்ட முடியாமல் தவித்து வந்தார். நான்கு மாதங்களுக்கு மேல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் குடும்பச் செலவுக்கு கூட பணம் இன்றி தவித்த அவர் ஆட்டோவை வடை கடையாக மாற்ற முடிவு செய்தார்

ஆட்டோவிலேயே அடுப்பு, வடை சுடும் பாத்திரம் மற்றும் கண்ணாடிப் பெட்டி ஆகியவற்றை அமைத்து அதில் சுத்தமான எண்ணெயில் சுகாதார முறையில் வடை செய்து கண்ணாடிப் பெட்டியில் வைத்து விற்பனை செய்து வருகிறார்

இவருடைய வடை நல்ல ருசியாக இருந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரும்பி வாங்கினர். இதனை அடுத்து தனக்கு அவர் நல்ல வருமானம் வருவதாகவும் இதை வைத்து தற்போதைக்கு குடும்ப செலவை சமாளித்து வருவதாகவும் அவர் கூறினார். அந்த இளைஞருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top