மகளிர் தினம் கொண்டாடிய பெண் கைதிகள்; புத்தாடை அணிந்து கோலாகலம்!

மதுரையில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் சிறைவாசிகளுடன் சிறையில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் இணைந்து சுங்குடி சேலைகளை அணிந்து மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

மார்ச் 8 ஆம் தேதி நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக மதுரை பெண்கள் தனிச்சிறையில் உள்ள பெண் சிறைவாசிகளுடன் சிறையில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் இணைந்து சிறைவாசிகளின் கைவண்ணத்தில் உருவான சுங்குடி சேலைகளை அணிந்து மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை சிறைத்துறை சரக துணைத்தலைவர் பழனி மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் எஸ்.வசந்தகண்ணன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்

மேலும் மதுரை பாத்திமா மற்றும் லேடி டோக் கல்லூரி (தனியார் கல்லூரி) மாணவிகள் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டு பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, நாடகம் உள்ளிட்டவை அரங்கேற்றினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.