ஒரு காலத்தில் வானொலிதான் எல்லாவற்றுக்கும் பொழுதுபோக்காக இருந்தது. வானொலி இல்லாமல் யாரும் இல்லை என்ற அளவு வானொலியின் புகழ் மேலோங்கி இருந்தது.
வானொலியில் பாடல்கள் கேட்பது, ஒலிச்சித்திரம் கேட்பது போன்றவற்றை அனைவரும் ஒரு காலத்தில் விரும்பினர்.
தற்போது பிரேக்கிங் நியூஸ் உடனுக்குடனே வந்து விடுகிறது அப்போது எல்லாம் இரவு ஒரு முக்கிய சம்பவம் நடந்து விட்டால் காலையில் 7 மணி வாக்கில் வானொலியில் வரும் ஆகாசவாணி செய்திகளை கேட்டால்தான் முதன் முதல் நமக்கு செய்திகளே தெரிய வரும்.
அப்படி தமிழர்களோடு கலந்து விட்ட வானொலிகளில் மதுரை, திருச்சி, நெல்லை, சென்னை , புதுவை ஆகிய வானொலி நிலையங்கள் செயல்பட்டு வந்தன.
இந்த வானொலி நிலையங்களின்
நிகழ்ச்சி தயாரிப்பை பொங்கல் திருநாளுடன் நிறுத்தி, அவற்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையில் இருந்து, தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக தரம்குறைக்க பிரச்சார் பாரதி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதை ஒட்டி அன்புமணி வெளியிட்ட அறிக்கை
தமிழக வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கடந்த செப்.29-ம் தேதி நான் சொன்னபோது அத்தகைய திட்டம் எல்லாம், எதுவும் இல்லை என்று பிரச்சார் பாரதி விளக்கம் அளித்தது.
5 வானொலி நிலையங்கள் மூடப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழப்பார்கள். நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.
எனவே, இந்த முடிவை கைவிட்டு, 5 வானொலி நிலையங்களும் இப்போது உள்ளபடியே தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.