மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்: ஐகோர்ட் கிளை புதிய உத்தரவு!!

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டிடம் டிசம்பர் 5ஆம் தேதி கட்டுமான பணிகள் முழுமையடையாத பட்சத்தில் புதிதாக கடை திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. அதே சமயம் அருகிலேயே தனியார் ஆம்னி பேருந்து நிலையம் உள்ளதாகவும், அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி இருந்த போதிலும் கட்டுமான பணிகள் பணிகள் எதுவும் முழுமை பெறாத நிலையில் ஏராளமான வாகனங்கள் சாலைகளின் இரு புறங்களிலும் நிறுத்தப்படுகின்றன.

இதுமட்டுமின்றி வணிக வளாகத்திற்கு ஆட்டோக்களில் வருபவர்களுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படாததால் அதிகப்படியாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவது மட்டுமில்லாமல் அருகில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவில் செல்லும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சாத்தையார் அணையின் உபரி நீர் வரும் வரத்து கால்வாயும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் மழை நீர் லேக் ஏரியா பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது. கட்டட பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே எவ்விதமான அவசரகால வெளியேறும் வழிகள் இன்றி கட்டடம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமான பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரையில் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

அதோடு பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் வரையில் சரவணா ஸ்டோர் செயல்பட தற்காலிக தடை அல்லது சில தலங்களை மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு அந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், தீயணைப்புத் துறையினர் அலுவலர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் கூறி விசாரணையை ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.