மண்ணெண்ணெய் அடுப்பில் வைத்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி- மதுரை வாலிபர் சிக்கினார்

எவ்வளவுதான் இலங்கைக்கு போதைப்பொருளை கடத்துவது தடை செய்யப்பட்டாலும் ஏதாவது ஒரு வழியில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் மண்ணெண்ணெய் அடுப்பில் வைத்து போதைப்பொருள் கடத்திய நபர் மதுரையில் கைது செய்யப்பட்டார்.

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ஜவஹர் மகன் ஷகில் அஹமது  என்பவர் உடைமைகளை போலீஸ் சோதனை செய்தபோது பையில் வைத்திருந்த பழைய மண்ணெண்ணெய் அடுப்பில், மண்ணெண்ணெய் இருக்கும் பகுதியில் விலை உயர்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

எனவே அவரைக் கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது  பொருள் தன்னுடையது இல்லை என்று ஷகில் அகமது கூறியுள்ளார்.

விமான நிலையம் வந்தபோது அறிமுகம் இல்லாத ஒருவர் இலங்கையில் சேர்த்து விடும்படி  கேட்டுக்கொண்டதன் பேரில் தான் எடுத்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment