மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமத்தில் இவ்வளவு மகிமை இருக்குதா? இங்கிலாந்து அறிஞர் அறிக்கை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது! என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்றபோது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல்.

images 2022 10 09T222927.665

உடனே, அதை பரிசோதனை செய்தாராம் சார்லஸ் டபிள்யூ. லெட்பீட்டர். மீனாட்சி அம்மனின் குங்குமத்திலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார் அவ்வறிஞர். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம்! எனத் தான் எழுதிய ‘தி இன்னர் லைப்’ என்ற புத்தகத்தில் அவர் எழுதினார்.

பொன்னியின் செல்வன் 2 எப்போ ரிலீஸ் தெரியுமா ? தெறிக்க விடும் அப்டேட்!

இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார்; சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தாராம்; அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனாராம் அவ்வறிஞர். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை! என்று அவர் எழுதி வைத்திருக்கிறார்.

எனவே மீனாட்சி அம்மனின் பிரசாதமான குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்காமல், கவனமாகப் பயன்படுத்துவோம். அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். இதனால் அன்னையின் அருள் என்றென்றும் நம்மிடம் நிலைத்திருக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment