கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அமைச்சராக இருந்த காலத்தில் அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலினை மிகவும் மோசமாக விமர்சித்து வந்தார்.
மேலும் ஆவினில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் இவர் மீது புகார் தரப்பட்ட நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
ராஜேந்திர பாலாஜியும் எங்கெங்கோ அலைந்து திரிந்தார் சினிமாவில் வில்லனை தேடுவது போல் எல்லாம் அவரை பற்றிய மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட போலீசார் அவரை தேடி வந்த நிலையில் அவர் கர்நாடக மாநிலம் அருகே கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலில் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.