இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறியவருக்கு BC வகுப்பா? மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

இந்த மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியவர் BC வகுப்பில் தொடர வேண்டுமென பதிவு செய்த வழக்கை சென்னை மதுரை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியவரை BC முஸ்லிம் என கருத வேண்டும் என்று கூறிய மதுரை ஐகோர்ட், அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2008ஆம் ஆண்டு இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும் லெப்பை வகுப்பை சமூகத்தைச் சேர்ந்த அவர் ஜாதி சான்றிதழ் வைத்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதிய போது முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன் என்றும் அதன்பிறகு எழுத்துத்தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன் என்றும், ஆனால் இந்த தேர்வு பட்டியலில் என்னுடைய பெயர் BC பிரிவில் இடம்பெறவில்லை என்றும் தகவல் உரிமை சட்டத்தில் இதுகுறித்து கேட்டபோது எனது பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலனை செய்யாமல் பொதுப்பிரிவில் பரிசீலனை உள்ளதாக எனக்கு தெரியவந்தது என்றும் எனவே என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்து உள்ளதால் மதம் மாறிய அவர் லெப்பை வகுப்பைச் சேர்ந்தவர் என்று அறிவிக்க முடியாது என்றும் எனவே மதம் மாறிய நபர் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்று தெரியவில்லை என்றும் மதம்மாறிய தன்னை BC முஸ்லீமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கோ அல்லது வேறு எந்த மதத்திற்கோ மாறுபவர்கள் BC வகுப்பை சேர்ந்தவராக கருத முடியாது என்பது இந்த தீர்ப்பில் இருந்து தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.