மதுரை மேம்பாலம் இடிந்து ஒருவர் பலி!

59c04190815647953ed682cdded03c97

மதுரையில் நத்தம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். இடிந்து விழுந்த பகுதியில் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து வருகிறார் 

மதுரை நத்தம் காலனி மேம்பால கட்டுமான பணிகள் மூன்று வருடங்களாக நடந்து வருகின்றன. 7.3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பாலத்தின் ஒவ்வொரு பிரிவும் 70 டன் எடை கொண்டதாக கூறப்படுகிறது. அதில் ஒரு பிரிவை பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இடிந்து விழுந்த பாலத்துக்கு அடியில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்று மீட்கும் பணியில் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்

மதுரை மேம்பாலம் விடிந்தத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment