
தமிழகம்
தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!! 850 டன் குப்பைகள் தேக்கம்;
தமிழகத்தில் தற்போது தூய்மைப் பணியாளர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர். முன்னதாக இவர்கள் துப்புரவு பணியாளர்கள் அழைக்கப்பட்டு தற்போது தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
மேலும் இவர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் பட்டதாரி இளைஞர்களும் இந்த பணிக்காக பதிவு செய்கின்றனர். இத்தகைய நிலையில் இன்றைய தினம் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி மதுரை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக மதுரையில் இன்று ஒரே நாளில் சுமார் 850 டன் குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளதாக தெரிகிறது.
இதனை அறிந்த மாநகராட்சி ஆணையர் உடனடியாக அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 28 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொறியியல் பிரிவு, தூய்மைப் பணியாளர்களுடன் மாநகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
