தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சாட்டை துரைமுருகன் மேல் முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாட்டை துரைமுருகனுக்கு உயர்நீதிமன்றம் அளித்த ஜாமீன் தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. சமூக வலைதளங்களில் இதுபோன்ற பொறுப்பற்ற விமர்சனங்களை வைக்கக் கூடாது எனவும் சாட்டை துரைமுருகனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் முதல்வர் மற்றும் சிலரை அவதூறான கருத்துக்களை பேசி யூ டூயூப்பில் பரப்பியதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சாட்டை துரைமுருகன் அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வரும் போது இனி இதுபோன்ற கருத்துகளை பதிவிட மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
அதில் திருப்தி அடைந்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்குகிறது ஆனால் ஜாமின் பெற்று இரண்டாவது நாளே மீண்டும் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார் எனவே அவருக்கு வழங்கிய ஜாமீனை உயர் நீதிமன்றம் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டது.
தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சாட்டை துரைமுருகன் மேல் முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
சாட்டை துரைமுருகன் சார்பில் ஆஜரான வழக்குரைஞரின் வாதத்தை பரிசீலித்த உச்சநீதிமன்றம், சாட்டை துரைமுருகன் மேல் முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
சாட்டை துரைமுருகனுக்கு உயர்நீதிமன்றம் அளித்த ஜாமீன் தொடரும். சமூக வலைதளங்களில் இதுபோன்ற பொறுப்பற்ற விமர்சனங்களை வைக்கக் கூடாது என்றும் எச்சரித்தது.