Connect with us

மதுரை ஆதினம் காலமானார்: புதிய ஆதினம் நியமனம்!

Tamil Nadu

மதுரை ஆதினம் காலமானார்: புதிய ஆதினம் நியமனம்!

e417ee87c07acd5994fb05a8ed386fe9

மதுரை ஆதினத்தின் 292வது ஆதீனமான அருணகிரி நாதர் அவர்கள் உடல் நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். அவருக்கு வயது 77

இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் புதிய ஆதினமாக  ஸ்ரீல ஸ்ரீரி ஹரிகர தேசிகர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவி ஏற்பு விழா தர்மபுரி ஆதினம் கோவை ஆதினம் உள்பட ஒருசில ஆதினங்களில் முன்னிலையில் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

d9700c7d301550593c08abd8be007ac9

மதுரை ஆதினம் மறைவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சமூகத்திற்கும் தமிழுக்கும் எண்ணற்ற சேவைகளைச் செய்து தொண்டாற்றிய நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட மதுரை ஆதீனத்தை சார்ந்தவர்களுக்கு ஆறுதல்கள் என தமிழக முதல்வர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் மதுரை ஆதினம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது மதுரை ஆதீனத்தின் அடுத்த ஆதினம் நான்தான் என நித்தியானந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீல ஸ்ரீரி ஹரிகர தேசிகர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top