வழக்கறிஞர்கள் கவுன் அணிய தேவையில்லை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேசிய கம்பெனி சட்ட வாரிய வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் வக்கீல் கவுன் அணிய வேண்டுமென்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வக்கீல் கவுன் அணிய வேண்டுமென்ற தேசிய கம்பெனி சட்ட வாரிய பதிவாளர் 2017ல் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் ஆர்.ராஜேஷ் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் முன்பு விசாரணைக்கு வந்த போது, எவ்வித அதிகாரமும் வழங்கப்படாத நிலையில், இதுபோன்ற விதிகள் வகுக்க சட்ட வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

உச்ச, உயர் நீதிமன்றங்களில் தவிர்த்து மற்ற நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அங்கி அணிய கட்டாயமில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.