மெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்? இதோ உங்களுக்காக..

சென்னை தினமானது ஒரு தனிநபருக்கான கொண்டாட்டம் அல்ல, இது  இந்த மாநிலத்தவருக்கான கொண்டாட்டம்.

இது தற்போது இந்த அளவு விமரிசையாகக் கொண்டாடப்பட நகர வரலாற்று அறிஞர் எஸ். முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டி சோஸா ஆகியோர்தான் காரணமாகும். ஒரு கட்டத்தில் மெட்ராஸ் டே  ஆனது மெட்ராஸ் வாரமாக மாறியது.

இந்த விழாவினை ஒட்டி  மாணவர்களுக்கான போட்டிகள், கண்காட்சிகள், விருது வழங்குதல் விழா, என மிக விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது,

f2320fb3f692bdff41ecebf3001daf2c

இந்த ஆண்டு சென்னையின் பிறந்தநாளானது ஆகஸ்டு 18 முதல் 25 ஆம் தேதி வரை கொண்டாடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் நமது மாநிலம் தொடர்பான வரலாற்று சிறப்பு விஷயங்கள் இடம் பெற்றிருக்கும், ஆதிகாலத்திலிருந்து இன்று வரையிலான நம் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், நாம் காணக் கிடைக்காத பழங்கால சென்னையின் புகைப்படங்கள், சென்னை தொடர்பான அஞ்சல் தலைகள், நம்முடைய பாரம்பரிய உணவுகள் என அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.

சிறப்பு தபால் தலை வெளியீடு 

கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் சார்பில் லைட் ஹவுஸ் துறை சிறப்பு தபால் தலையை வெளியிடுகிறது.

 
புகைப்படக் கண்காட்சி:

போட்டோகிராபிக் போட்டியை மெட்ராஸ் போட்டோகிராபிக் சொசைட்டி ஷூட் மெட்ராஸ் 2019என்ற பெயரில் நடத்தியுள்ளது. இதில் வெற்றி பெற்ற புகைப்படங்கள் இக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன. 

நன்கொடையாளர்கள் விருது
பெசன்ட் நகரைச் சேர்ந்த மக்கள்  சென்னை நகர் மக்களை சிறப்பிக்க சிறந்த நன்கொடையாளர்களுக்கு விருது வழங்குகின்றனர். 

  1. மெட்ராஸ் போட்டோ ப்ளாக்கர்ஸ் புகைப்படக் கண்காட்சி
  2. ஃபுட் வாக்: மயிலாப்பூர் ஃபுட் வாக் 
  3. குழந்தைகளுக்கான போர்டு கேம் விளையாட்டு 
  4.  அப்ஸ்டிராக்ட் பெயிண்டிங் கண்காட்சி 
  5. ஃபுட் வாக்: புரசைவாக்கம் ஃபுட் வாக் 
  6. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர்  themadrasday@gmail.com என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தல் வேண்டும்.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...