கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் மத்திய பிரதேச மாநிலம் சட்டாபூரில் இருந்து பன்னா என்ற இடத்துக்கு தனியார் பயணிகள் பேருந்து புறப்பட்டு சென்றது.
பேருந்தில் 40 பேர் பயணம் செய்த நிலையி ஓட்டுநர் சம்சுதீன் பயணிகளின் பேச்சை கேட்காமல் மிக வேகமாக பேருந்தை இயக்கியுள்ளார் பயணிகள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்திருந்த நிலையில் மால்டா என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது.
இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 22 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். ஆனால், ஓட்டுநர் சம்சுதீன் வெளியே குதித்து தப்பினார்.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி சோமான்கர் பேருந்து உரிமையாளருக்கு10 ஆண்டு சிறை தண்டனையும், மிகவும் திமிராக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.