மதுராந்தகம் ஏரி, பொன்னை அணைக்கட்டில் இருந்து நீர்த்திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பாக சென்னையை சுற்றியுள்ள பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மதுராந்தகம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி விட்டதாகவும் இதன் காரணமாக மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரியிலிருந்து கிளி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அந்த ஆற்றின் கரையோரம் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கிளி ஆற்றின் கரையோரம் உள்ள 21 கிராம மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் பொன்னை அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 2142 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment