சாக்‌ஷியிடம் வம்பை விலை கொடுத்து வாங்கும் மதுமிதா..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அந்த டாஸ்க்கின்படி, வனிதா மற்றும் முகின், போட்டியாளர்களை வேடிக்கையாக கொலை செய்து வருகின்றனர். 

 மேக்-அப்பை தானாக அழிக்க செய்வதன் மூலம் நடிகை சாக்‌ஷி கொலை செய்யப்பட்டார். அதேபோல, மைக்கேல் ஜாக்சன் போல ஆட வைத்து மோகன் வைத்தியாவும் கொலை செய்யப்பட்டார்.

cdc330b3936a9a9feb55292d9f289c36

நேற்றுத் தொடங்கிய இந்த டாஸ்க் இன்றும் தொடர்கிறது. கொலையாளிகளான வனிதா மற்றும் முகின் ராவ் இன்றும் வேடிக்கையாக போட்டியாளர்களை கொலை செய்யவுள்ளனர்.. 

அதன்படி, இன்றைய நிகழ்ச்சிக்காக வெளியாகியுள்ள ப்ரோமோவில், மதுமிதா கொல்லப்பட்ட சாக்‌ஷிக்காக அஞ்சலி செலுத்தும்படி டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கும், அப்போது வெளியே தான் பார்த்த சாக்‌ஷி வேறு, வீட்டுக்குள் இருப்பவர் வேறு. குறிப்பாக கவினை காதலிப்பது போன்று நடிக்கிறார் என்று குறிப்பிட்டார். 

இதனால் கவின் அருகில் அமர்ந்திருக்கும் சாக்‌ஷிக்கு முகம் வாடிவிடுகிறது. வம்பை விலை கொடுத்து ஏன் வாங்குகிறார் மதுமிதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment