Entertainment
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா!
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி வேறு லெவலாக போய்க் கொண்டிருக்கிறது, கடந்த வாரத்தின் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்குள் மீண்டும் நுழைந்தார், அவர் உள்நுழைந்ததே சரிந்த டிஆர்பியை ஈடுகட்டவே என்பது அவர் வந்த முதல்நாளே தெரிந்தது.
அவர் முதன் முதலாக கையில் எடுத்தது அபிராமி- முகினின் நட்பினைத் தான்; அதன்பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆணாதிக்கம் உள்ளதாக மதுமிதாவிடம் கூற, அது பெரும் பிரச்சினை ஆனது. வனிதா விரித்த வலையில் மாட்டிக் கொண்டது மதுமிதாதான்.

அதிலும் அதிரடியாக நேற்றைய நிகழ்ச்சியில் ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிந்து கடுமையாக சண்டையிட்டனர்.
கடந்தவாரம் முழுமையும் இந்தப் பிரச்சினையிலேயே வாரம் சென்றது, தற்போது சாண்டியின் தலைவர் பதவி முடிய, இந்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் நடந்தது. இதில் ஷெரின், மதுமிதா, முகின் ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மதுமிதா புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனாலும் லோஸ்லியா, கவின், சாண்டி, முகின், மதுமிதா ஆகியோர் மதுமிதா, சேரன் மற்றும் கஸ்தூரியைத் தாக்கும்படி பாடல்களைப் பாடி வந்தனர். இதனால் மிகுந்த அளவில் சேரனும், மதுமிதாவும் மனமுடைந்ததாகவே தெரிந்தது.
அதற்கிடையில் மதுமிதா வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கமல்ஹாசன் வீட்டின் கதவைத் திறந்துவைத்தால், வெளியேறும் முதல் நபராக நானிருப்பேன் என்று கூறிய அவர், சொன்னதை செய்துவிட்டாரா? என்று புலம்பி வருகின்றனர்.
