Entertainment
மக்களின் பேராதரவைப் பெற்ற மதுமிதா..
பிக் பாஸ் சீசன் 3 இரண்டாவது வாரத்தை முழுமையாக கடக்கவுள்ள நிலையில், பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் ஓவியாவை அனைவரும் டார்க்கெட் செய்ததுபோல இந்த சீசனில் மீரா மிதுன் மற்றும் மதுமிதா ஆகிய இருவரையும் டார்க்கெட் செய்யப்பட்டு வரப்படுகின்றனர்.
முதல் முறையாக இந்த வாரம் எலிமினேஷன் நடக்க இருக்கிறது. இதில், ஏற்கனவே கேப்டனாக இருந்த வனிதாவும், தற்போது கேப்டனாக இருக்கும் மோகன் வைத்யா ஆகிய இருவரும் பிக் பாஸ் விதிமுறைப்படி இந்த வாரம் வெளியேறப்போவதில்லை.

இவர்களைத் தொடர்ந்து எலிமினேஷன் பட்டியலில் வாக்குகள் அடிப்படையில் பார்த்தால், மீரா மிதுன் தான் 8 வாக்குகள் பெற்றுள்ளதால் அவர் தான் வெளியேறுவார். ஆனால், மக்களின் ஆதரவைப் பொறுத்துத் தான் பட்டியலில் இடம் பெற்றவர்களின் வெளியேற்றம் கணக்கிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,
அதுக்காக இப்படியா காட்டு காட்டுனு காட்டுத்தனமா காட்டீட்டீங்க. உள்ளே 7 பேரை நாமினேட் செய்து வச்சுருக்கீங்க. சரி, அவங்க தான் அப்படின்னா…நீங்க…10 கோடி ஓட்டுகள் போட்டு உங்க முகத்த காட்டிருக்கீங்க..சாரி உங்க பவர காட்டிருக்கீங்க. உங்கள் முதல் தீர்ப்பு என்ன? என்று கமல் ஹாசன் கேள்வி எழுப்பியிருந்தார்.
எபிஸோடின் முடிவில், கமல்ஹாசன் யார் வெளியேறப் போவது என்பதை, நாளை அறிவிக்கப் போவதாகவும் இன்று யார் வெளியேறப் போவதில்லை என்று அறிவிக்க உள்ளதாகவும் கூறினார். அதில் மக்கள் எதிர்பார்த்தபடி மதுமிதாவின் பெயரே இருந்தது. _
