ஜெயிலில் சொகுசு வசதி வேணும்.. பப்ஜி மதனுக்காக சிறை அதிகாரியுடன் ப்ளான் போட்ட மதன் மனைவி.. வெளியான ஆடியோவால் பரபரப்பு
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அப்ளிகேஷனில் ஒன்றான பப்ஜி ஆப்பிற்காக யூடியூப் சேனல் துவக்கி சிறுவர்களுடன் ஆபாசமாகப் பேசிய பப்ஜி மதன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தங்களிடம் இருப்பது சொகுசு கார் இல்லை ஆடி கார்தான் என்று சொல்லி நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோலுக்கு ஆளானார்.
அத்துடன் தற்போது பப்ஜி மதன் விவகாரத்தில் மற்றுமொரு சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.
அதாவது கிருத்திகா ஜெயிலில் பப்ஜி மதனை சொகுசாக வைத்துக் கொள்ளக்கோரி சிறை அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
அதாவது சிறை அதிகாரி ஒருவரை மொபைல்மூலம் தொடர்பு கொண்ட மதன் மனைவி கிருத்திகா 3 லட்சம் லஞ்சம் தருவதாகக் கூறுகிறார்.
ஜெயிலில் மதனை சொகுசாக வைத்திருப்பதற்காகத் தான் அந்தப் பணம் லஞ்சமாக கொடுக்கப்படுகிறது.
பணம் பெரிய தொகை என்பதால் இரண்டு நாட்கள் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.
அதனால் அவரது குடும்பத்தார் 3 லட்சம் பணத்திற்கு ரெடி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
என்னது 3 லட்சம் பெரிய தொகையா? என்று நெட்டிசன்கள் மீண்டும் கிருத்திகாவை வெச்சு செய்கிறார்கள். மறுபுறம் காவல் துறையினர் செயல் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
