வெளியாகும் சொல்றாங்க, தேதி தள்ளிப்போகுது, ரிப்பீட்டு! மாநாடு நாளை ரிலீஸ் இல்லை!!

மக்களிடையே லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் சிம்பு. இவர் சிறுவயது முதலே நடிப்பில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக காணப்படுகிறார். இவருக்கென்று தமிழ்சினிமாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாக உள்ளனர்.

maanadu trailer9 1

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இதனால் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் நாளைய தினம் மாநாடு திரைப்படம் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருந்த நிலையில் திடீரென்று ரசிகர்களுக்கு பெரும் சோகம் அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி  நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படம் நாளைய தினம் வெளியாகாது என்றும் வெளியீடு தேதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நாளைய தினம் தமிழகத்தில் திரையரங்குகளில் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆகாது.  தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தேதி தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment