சிம்புவின் ‘மாநாடு’ டிரைலர் ரிலீஸ்!
சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள், அரசியல் மாநாடு காட்சிகள் என பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘மாநாடு’ டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக சிம்புவின் ரசிகர்களுக்கு இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் விருந்தாக அமையும் என்றும் சிம்புவுக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி மகேந்திரன், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் தங்கள் கேரக்டரை அசத்தியுள்ளனர். இந்த படத்தின் டிரைலர் இதோ
