நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக 100 கோடிக்கு மேல் வசூலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எடுத்திருக்கும் படம் மாநாடு. அதிக பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் மாநாடு படம் ரீமேக்கில் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதோடு இந்த படத்திற்கு நடிகர் ராணா நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பால் நடிகர் ராணா ரசிகர்கள் குஷியில் பூரித்துப்போய் உள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.