சிம்பு, எஸ், ஜே சூர்யா நடிக்க மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25ம் தேதி வெளியானது.ஆரம்பத்தில் இந்த படம் வெளிவருவதற்கு நிறைய தடங்கல் உருவானது குறிப்பிடத்தக்கது.
ஒரு வழியாக ரிலீஸ் ஆன இந்த படம் நல்லதொரு வெற்றியையும் பெற்றது. எஸ்.ஜே சூர்யா பேசிய வந்தான் சுட்டான் போயிட்டான் என்ற வரிகள் கொண்ட டயலாக் மிகவும் புகழ்பெற்ற டயலாக் ஆக விளங்கியது.
இந்த படம் வெளியாகி இன்றுடன் 50வது நாள் ஆகிவிட்டதாம் இதையொட்டி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் அறிக்கை.
எல்லா தடங்கல்களையும் அடித்து நொறுக்கி 50 நாட்களை இன்றொடு எட்டியுள்ளது ஆச்சரியமளிக்கிறது. நிச்சயம் 100வது நாள் என்ற இலக்கையும் இப்படம் எட்டும் என்பதில் சந்தேகமில்லை.
வெற்றி என்பது தமக்கு தாமே கூவி கொள்வதல்ல. வெற்றி தன்னைத்தானே அறிவித்துக்கொள்ளும் என்பதாக இந்த வெற்றி அமைந்துள்ளது.
இதற்கு காரணமான இயக்குனர் வெங்கட் பிரபு, நாயகன் சிம்பு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.