மாநாடு விலகல்! எனிமிக்கும் குடைச்சலா? அண்ணாத்த அட்டாக்! புலம்பும் புரொடியூசர்!!

வருகின்ற தீபாவளி அன்று தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் திரையரங்குக்கு வர உள்ளன. அதுவும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

அண்ணாத்தஇந்த நிலையில் ஏற்கனவே நடிகர் சிம்புவின் மாநாடு படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தீபாவளி ரேஸில் இருந்து விலகியது மாநாடு. இந்த நிலையில் தற்போது எனிமி திரைப்படத்துக்கும் பல சிக்கல்கள் உருவாகி உள்ளதாக காணப்படுகிறது.

ஏனென்றால் தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் பல திரையரங்குகள்  அண்ணாத்த திரைப்படத்தின் பதிவு செய்கின்றன. இதனால் எனிமி திரைப்படத்துக்கு 100 திரையரங்குகளில் கூட கிடைக்காது என்பதால் விரக்தியில் உள்ளார் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத்.

தமிழகத்தில் உள்ள 900 திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படத்தை அதிக காட்சிகள் வெளியிடுவதில் திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.

எனிமி சிம்புவின் மாநாடு படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காத சூழலில் தங்கள் படத்தை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். சிம்புவின் படத்தை வெளியிட விடாமல் சிலர் பஞ்சாயத்து செய்ததாகவும் டி ஆர் மற்றும் அவரது மனைவி உஷாவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மாநாடு படம் விலகியதால் எப்படி நமக்கு கூடுதல் கிடைக்கும் என்றும் வசூலும் கணிசமாக உயரும் என்ற நம்பிக்கையோடு இருந்தனர் என்று எனிமி திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் கூறியுள்ளார்.

ஆனால் அவரது கனவில் கல் விழுந்த கதையாக தமிழகத்தில் 100 திரையரங்குகளில் கூட எனிமி படத்திற்கு கிடைக்காது என்று தகவல் கிடைத்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அண்ணாத்த படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் தங்களுக்குப் போதுமான திரையரங்குகளில் ஒதுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

தயாரிப்பாளர் வினோத்தின் கோரிக்கையை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அண்ணாத்த தயாரிப்பாளருக்கு எதிராக குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் எனிமி  திரைப்பட தயாரிப்பாளர்.

அதன்படி தமிழகத்தில் 250 திரையரங்குகள்  கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக  எனிமி  தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். அண்ணாத்த மட்டும்  வெளியானால் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment