
பொழுதுபோக்கு
மாமனிதன் – முதல் டுவிட்டர் பதிவிட்ட பிரபல இயக்குனர்!
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி கூட்டணியில் 4-வது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். விஜய்சேதுபதியின் இரண்டாவது படமான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் இணைந்து நடிக்க தொடக்கி ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், விக்ரம் படங்களில் காயத்ரி நடித்துள்ளார்.
இந்த படத்திற்காக முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளார். இதையடுத்து 4 முறை தள்ளிப்போன இந்தப் படம் இன்று வெளியானது.
இந்த படத்தின் கதைக்களம் இரண்டு குழந்தைக்கு அப்பா அம்மாவாக விஜய் சேதுபதி,காயத்ரி நடித்துள்ளனர். மேலும் படத்திற்காக மேக்கப் போடாமல் சற்று உடல் எடையை கூட்டி நடித்தார்.
அவருடன் நிறைய படங்களில் நடித்து விட்டேன்,இன்னும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் அவருடன் நடிப்பேன் என காயத்ரியின் திறமையை புகழ்ந்து விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவரை தொடர்ந்து சீனு ராமசாமி,மாமனிதன் படத்தில் காயத்ரி மிகச்சிறப்பாக நடித்திருப்பார். இதற்காக அவருக்கு தேசிய விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.இந்த படம் மிகச் சிறந்த குடும்பப் படமாக மாமனிதன் அமையும் என அவர் கூறியுள்ளார்.
இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை ‘தர்மதுரை’ தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (23.06.2022) மாமனிதன் படத்தின் சிறப்புக்காட்சி பத்திரிக்கையாளர்கள் & சினிமா பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. இந்த சிறப்புக்காட்சியை இயக்குனர் ஷங்கர் பார்த்துவிட்டு மாமனிதன் படம் குறித்து Face Book & டிவிட்டரில் எழுதியுள்ளார்.
சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக களமிறங்க போவது யாரு தெரியுமா?
