இணையத்தை அலையவிடும் தர்ஷன்-லாஸ்லியா படத்தின் அலை அலை பாடல் லிரிக்ஸ்….
தமிழகத்தில் கடந்த வாரம்தான் பிக் பாஸ் சீசன் 5 நிறைவு பெற்றது. என்னதான் பிக் பாஸ் சீசன் 5 வரை வந்திருந்தாலும் தமிழ் மக்களால் இன்றளவும் ரசித்தது பிக் பாஸ் சீசன் 3. ஏன் என்றால் பிக் பாஸ் சீசன் 3 சாண்டி, தர்ஷன், லாஸ்லியா, கவின், முகின் இவர்கள் அனைவரும் செய்த அட்டகாசத்தில் இன்றும் பார்க்கும்போது மகிழ்ச்சியை கொடுப்பதாக காணப்படுகிறது.
இந்த நிலையில் bigboss3 முடிந்த பின்பு பலரும் சினிமா துறையில் பிசியாகி கொண்டனர். அதுவும் குறிப்பாக முகின்ராவ் நடிப்பில் வேலன் என்ற திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. அதேபோல் நடிகை லாஸ்லியா நடிப்பில் பிரெண்ட்ஷிப் திரைப்படமும் வெளியாகி அவருக்கு நல்லதொரு பெயரை பெற்றுக் கொடுத்தது.
இந்த நிலையில் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தர்ஷன் படம் பற்றிதான். ஏனென்றால் இவர் ஆல்பம் சாங் மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில் bigboss3 ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது கூகுள் குட்டப்பா.
இந்த திரைப்படத்தில் நடிகர் தர்ஷனுக்கு ஜோடியாக நடிகை லாஸ்லியா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தினை சபரி சரவணன் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூகுள் கூட்டத்தில் அலை அலை பாடலின் லிரிக்ஸ் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது அதிலும் அந்தப் பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
