Entertainment
வாட்ஸ் அப்பில் தர்பார் படம்: அதிர்ச்சியில் புகார் அளித்த லைகா

வாட்ஸ் அப்பில் தர்பார் படத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து லீக் செய்ய உள்ளதாகவும் எனவே தர்பார் படத்தை யாரும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டாம் என்றும் ஒரு ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது
இது குறித்து தகவல் அறிந்த லைகா நிறுவனம் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது
தர்பார் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் நாங்கள் தயாரித்துள்ள நிலையில் இதுபோன்ற வாட்ஸ்அப் தகவலால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் இந்த படம் பகிரப்பட்டால் எங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்
எனவே இந்த தகவலை பரப்புவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக லைகா நிறுவனம் தனது புகார் மனுவில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

